நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்ததால் அவர் மீது மோசடி புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் தனது மகன் எனக்கூறி மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனுஷ் போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாக மதுரை கே.புதூர் காவல்நிலையத்தில் தற்போது கதிரேசன் புகார் அளித்துள்ளார். அதில், தனுஷ் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழ், ஆதார் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் போலி எனவும் உயர்நீதிமன்றத்தில் போலியான ஆவணங்களை தாக்கல் செய்ததால் அவர் மீது மோசடி புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.