கடந்த வாரம் காணாமல் போன ஹாலிவுட் நடிகர் சார்லஸ் லெவின் (70), சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஹாலிவுட்டில், எவ்ரிபடி ரைட்ஸ் ஆப் காரவ்சல், அன்னி ஹால், பிட்வீன் த லைன்ஸ், மான்ஹாட்டன், தி மேன் வித் ஒன் ரெட் ஷூ, த கோல்டன் சைல்ட், சிவில் ஆக்ஷன் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர், சார்லஸ் லெவின். ஏராளமான டிவி. தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த ’சீன்ஃபெல்ட்’ என்ற தொடர் பிரபலமான ஒன்று.
ஹாலிவுட்டில் பிரபலமான இவர், கடந்த 8 ஆம் தேதி காணாமல் போனார். அவர் எங்கு போனார் என்று தெரியவில்லை. இதையடுத்து அவர் மகன் போலீசில் புகார் செய்தார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அவரது கார், ஒரேகான் பகுதியில் செல்மா என்ற இடத்தில் ஆட்கள் யாருமற்ற சாலை யின் ஓரத்தில் நிற்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குள் அவரது நாய் உயிரிழந்த நிலையில் கிடந்தது. இதையடுத்து அங்கே யே லெவினைத் தேடி வந்தனர். கார் நின்றிருந்த இடத்துக்கு அருகில் உடல் ஒன்றையும் போலீசார் கண்டுபிடித்தனர். அது லெவினாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இந்நிலையில் அது அவரது உடல்தான் என உறுதிப்படுத்தப் பட்டுள் ளதாகத் தெரிகிறது.
மறைந்த நடிகர் லெவினுக்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.