சினிமா

பிக்பாஸ் பட்டத்தை வெல்கிறாரா ஆரவ்?

பிக்பாஸ் பட்டத்தை வெல்கிறாரா ஆரவ்?

Rasus

பிக்பாஸில் ஆரவ் அல்லது சிநேகன் வெற்றி பெறலாம் என சுஜா தெரிவித்தார்.

100 நாட்கள் நடைபெறும் பிக்பாஸில், பாதி நாட்களை கடந்த பின்புதான் சுஜா புது போட்டியாளராக என்ட்ரி கொடுத்தார். வெளியிலிருந்து, உள்ளிருக்கும் போட்டியாளர்களின் மனநிலையை ஓரளவிற்கு புரிந்து கொண்ட பின் உள்ளே சென்ற சுஜா ஆரம்பத்தில் இருந்தே எப்படியாவது பிக்பாஸ் டைட்டிலை வென்றுவிடும் எனும் உத்வேகத்தோடு ஒவ்வொரு டாஸ்க்கிலும் பங்கெடுத்தார். 'என் வாழ்நாளில் எந்தவொரு வெற்றியையும் ருசித்துப் பார்த்ததில்லை. இதன் மூலமாவது வெற்றியை ருசித்து பார்த்துவிடுவேன்' என்று தொடர்ச்சியாக சொன்ன அவர், சக போட்டியாளர்களுக்கு சவாலாகவே விளங்கினார். டாஸ்க் மூலம் பெற்ற மதிப்பெண்கள் அதிகம் இருந்த போதும், ரசிகர்களின் ஓட்டு குறைவாக இருந்தால் அவர் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார்.

வெளியேற்றத்திற்கு பின் கமல்ஹாசன் உடனான உரையாடலின் போது, ' ரசிகர்கள் சுஜாவிடம் கேள்வி கேட்கலாம். அவர் அதற்கு பதிலளிப்பார்' என கமல் தெரிவித்தார். அப்போது, அங்கிருந்த ரசிகர் ஒருவர் பிக்பாஸ் போட்டியை வெல்லப் போவது யார் என நினைக்கிறீர்கள் என சுஜாவிடம் கேட்க, ஆரவ் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார். அதேபோன்று சிநேகனும் பிக்பாஸ் பட்டத்தை வெல்லலாம் என்றார். எனினும் ஆரவிற்கு மற்ற போட்டியாளர்களை விட அதிக நல்ல குணாதிசயங்கள் இருப்பதாகவும் சுஜா குறிப்பிட்டார். தான் நிகழ்ச்சியில், கேமராவிற்காக விளையாடாமல் உண்மையாகவும், நேர்மையாகவுமே மட்டுமே விளையாடியதாகவும் சுஜா தெரிவித்தார். இன்னும் ஒரு வாரத்தில் பிக்பாஸ் வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும்.