பெண்களைக் குறித்த சர்ச்சைக் கருத்தைத் தெரிவித்த தெலுங்கு நடிகர் சலபதி ராவ் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ராரண்டோய் வேதுகா சுதம் என்ற படத்தில் சலபதி ராவின் கதாபாத்திரம் பேசுவதாக “பெண்களால் மன அமைதிக்கு காயம் ஏற்படும்” ஒரு வசனம் அப்படத்தில் இருந்தது. இந்த நிகழ்ச்சியின்போது இது குறித்த கேள்வியை பெண் நெறியாளர் ஒருவர் கேட்டபோது, அதற்குப் பதில் அளித்த சலபதி ராவ், “பெண்கள் தீங்கானவர்கள் அல்ல, படுக்கையில் பயனுள்ளவர்கள்” என்று கூறினார்.
சலபதி ராவின் இந்தக் கருத்திற்கு, நாக சைதன்யா, நாகார்ஜூனா, ராகுல் ப்ரீத் சிங் போன்ற பல திரையுலகினர் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து, “எனது கருத்து திரிக்கப்பட்டுவிட்டது. எனது கருத்து யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.