CBFC CBFC
சினிமா

திரைப்படங்களுக்குக் கடும் கட்டுப்பாடு விதிப்பு.. வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அரசு!!

இனம், மதம் அல்லது பிற குழுக்களை இழிவுபடுத்தும் காட்சிகள், வார்த்தைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

PT WEB

திரைப்படங்களில் போதைப்பொருள் பயன்படுத்தும் காட்சிகளுக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. போதைப்பொருள் பயன்பாடு, கடத்தல் போன்ற காட்சிகளில் சட்டபூர்வ எச்சரிக்கை கட்டாயம் இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மது அருந்துதல், போதைப்பொருள் பழக்கம், புகையிலை நுகர்வு ஆகியவற்றை ஊக்கப்படுத்துவதைத் திரைப்படங்கள் காட்டக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CBFC

இனம், மதம் அல்லது பிற குழுக்களை இழிவுபடுத்தும் காட்சிகள், வார்த்தைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வகுப்புவாத, பிற்போக்குத்தனமான, அறிவியலுக்கு எதிரான மனப்பான்மைகளை ஊக்குவிக்கும் உள்ளடக்கங்களுக்குத் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்முறை, பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் காட்டப்படக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.