சினிமா

தனுஷின் 18 ஆண்டுக்கால திரை வாழ்க்கை - வெளியாகிறதா ‘காமன் டிபி’ ?

தனுஷின் 18 ஆண்டுக்கால திரை வாழ்க்கை - வெளியாகிறதா ‘காமன் டிபி’ ?

PT


நடிகர் தனுஷின் 18 ஆண்டுக் கால திரைத்துறை வாழ்க்கையைக் கொண்டாடும் விதத்தில் இன்று மாலை 5  மணிக்கு அவருக்கு ஒரு ‘காமன் டிபி’யை வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.


தமிழ்த் திரைத்துறையில் “துள்ளுவதோ இளமை” படம் மூலமாக அறிமுகமானவர் தனுஷ். அதன் பின்னர் “காதல் கொண்டேன்’, ’திருடா திருடி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அவர் நடித்த பல படங்கள் அவருக்கு நற்பெயரை வாங்கித்தந்தாலும் “ஆடுகளம்” படம் அவரது திரைத்துறை வாழ்வில் மிக முக்கியமான படமாக அமைந்தது.

அந்தப் படத்திற்காக அவருக்குச் சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது. அது வரை தமிழ்த் திரைத்துறையில் மட்டும் நடித்துக்கொண்டிருந்த அவர் பாலிவுட், ஹாலிவுட் எனப் பறக்கத் தொடங்கினார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான அசுரன் படமும் அவரது ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.


இந்நிலையில் நடிகர் தனுஷ், திரைத்துறையில் அடியெடுத்து வைத்து நாளையுடன் 18 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதனைக் கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்களும் தனுஷூக்காக ஒரு ‘காமன் டிபி’யை இன்று மாலை  மணிக்கு வெளியிட இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

முன்னதாக மே 1 ஆம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அவருக்கு ஒரு ‘காமன் டிபி’ சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.