பணம் வாங்கிக்கொண்டு கலை நிகழ்ச்சியில் பங்கேற்காத நடிகை சோனாக்ஷி சின்ஹா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பிரபல இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா. இந்தி நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகள். தமிழில், ’லிங்கா’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்திருந்தார். இவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி, ’இந்தியா பேஷன் மற்றும் பியூட்டி விருது’ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களிடம் பணம் வாங்கியிருந்தார்.
அவருக்கு நான்கு தவணைகளில் ரூ.37 லட்சம் வழங்கப்பட்டது. ஆனால், கடைசி நிமிடத்தில் அவர் வரமறுத்துவிட்டார். இதனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறும் கேட்டனர். அவர் தரவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் போலீஸ் ஸ்டேஷனில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், இப்போது மோசடி புகார் கொடுத்தனர். போலீசார் சோனாக்ஷி சின்ஹா உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.