சினிமா

'ஆரம்பிக்கலாங்களா?' - கமல்ஹாசன் உடன் படப்பிடிப்புக்கு தயாராகும் லோகேஷ் கனகராஜ்!

'ஆரம்பிக்கலாங்களா?' - கமல்ஹாசன் உடன் படப்பிடிப்புக்கு தயாராகும் லோகேஷ் கனகராஜ்!

sharpana

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்ததையடுத்து, கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்’ படத்துக்கான வேலைகளை தொடரும் ஆர்வத்தில் இருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

நடிகர் கமல்ஹாசனுடன் விமானத்தில் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள லோகேஷ் கனகராஜ், 'ஆரம்பிக்கலாங்களா' என்ற ஸ்டேட்டஸ் பதிவுடன் விக்ரம் படத்தின் ஹேஷ்டேகையும் குறிப்பிட்டுள்ளார்.

’மாஸ்டர்’ வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்கிவிருக்கிறார். கடந்த 1986 ஆம் ஆண்டு கமல்ஹாசன், சத்யராஜ் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற ‘விக்ரம்’ படத்தின் தலைப்பே இப்படத்துக்கும் சூட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கடந்த நான்கு மாதங்களாக தொடர்ச்சியாக பிரசாரங்களிலும் சுற்றுப் பயணங்களிலும் கமல்ஹாசன் கவனம் செலுத்தியதால், 'விக்ரம்' படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தார் லோகேஷ் கனகராஜ்.

இதனிடையே, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தற்போது அவர் கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு வந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலும் நிறைவடைந்துவிட்டதால், கமல்ஹாசனுடன் இணைந்து படப்பிடிப்பு வேலைகளில்  ஈடுபட ஆர்வம் காட்டியுள்ளார்.