அஜித்தின் ‘விசுவாசம்’படத்தில் வாய்ப்பு கிடைத்திருப்பதாக போஸ்வெங்கட் தெரிவித்திருக்கிறார்.
சின்னத்திரை சீரியல் மூலம் சினிமாவிற்குள் வந்தவர் போஸ் வெங்கட். ‘தீரன் அதிகாரம் ஒன்று’பின் அவரது பாத்திரம் அதிகம் கவனிக்கப்பட்டது. சினிமா வாழ்க்கைக்குப் பிறகு அவர் முற்றிலுமாக சீரியல் வாழ்க்கைக்கு முழுக்குப் போட்டுவிட்டார். இந்நிலையில் அவர் அஜித்தின் ‘விசுவாசம்’ படத்தில் கமீட் ஆகியிருப்பதாக தெரிவித்திருக்கிறார். ‘என்னை அறிந்தால்’. ‘வீரம்’ படங்களில் நடித்த வில்லன்களுக்கு டப்பிங் கொடுத்ததன் மூலம் அவர் அஜித்தை சந்திக்க வாய்ப்புக் கிடைத்ததாகவும் அப்போது அஜித் “உங்களது குரல் என்னமா இருக்கிறது” என கூறி பாராட்டியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அந்த அறிமுகத்தின் மூலமே தற்போது அவருக்கு ‘விசுவாசம்’ படத்தில் வாய்ப்புக் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் மே மாதம் இருந்ததாகவும் ஆனால் தற்போது வேலை நிறுத்தம் தொடர்வதால் இன்னும் தேதி முடிவாகிவில்லை எனக் கூறியிருக்கும் போஸ் விரைவில் அஜித் உடன் சேர்ந்து நடிப்பதற்காக உற்சாகமாக காத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.