சினிமா

’ஜேம்ஸ்பாண்டை இறக்கச் சொல்வதா?’ விலகினார் இயக்குனர் டேனி பாய்ல்!

webteam

25-வது ஜேம்ஸ்பாண்ட் படத்தை இயக்குவதில் இருந்து இயக்குனர் டேனி பாய்ல் விலகியுள்ளார்.

ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு இருக்கிறது. இயான் ஃபிளமிங்க் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்ட பாண்ட் கேரக்டரை கொண்ட படங்கள், வசூலிலும் சாதனை படைக்கிறது. பாண்ட் பட வரிசையின் 25 வது படம், டிசம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. அதற்கான முன் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகின்றன. 

தொடர்ந்து நான்கு படங்களில் ஜேம்ஸ்பாண்ட்-ஆக நடித்த டேனியல் கிரேக் இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக முதலில் செய்தி வெளியா னது. அவருக்குப் பதிலாக கறுப்பினத்தைச் சேர்ந்த இட்ரிஸ் எல்பா நடிப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் டேனியல் கிரேக் மீண்டும் இந்தப் படத்தில் நடிக்கிறார். ’ஸ்லம்டாக் மில்லினர்’ படத்தை இயக்கிய டேனி பாய்ல் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. 

படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்த வந்த நிலையில் படத்தில் இருந்து இயக்குனர் பாய்ல் வெளியேறிவிட்டார். இந்த தகவல் ஜேம்ஸ்பாண்ட் ட்விட்டர் பக்கத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. படைப்பு ரீதியாக ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பாய்ல் விலகிவிட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.

படத்தின் கிளைமாக்ஸில் ஹீரோ இறந்துவிடுவது போல காட்சியை வைக்கச் சொன்னார்களாம் டேனியல் கிரேக்கும் தயாரிப்பாளர் பார்பரா புரோக்கோலியும். ஏனென்றால் கிரேக்குக்கு இதுதான் கடைசி பாண்ட் படம் எனக் கூறப்படுகிறது. ஜேம்ஸ் பாண்ட்டை கிளைமாக்ஸில் சாகடிப் பது கேலிக்குரியது, இப்படியொரு ஐடியாவே தவறான ஒன்று என்று கூறிவிட்டார் பாய்ல். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாய்ல் படத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

(டேனி பாய்ல்)

இந்தப் படத்தின் படப்பிடிப்பை, டிசம்பரில் தொடங்கி 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது டேனி பாய்ல் விலகிவிட்டதால் திட்டமிட்ட தேதியில் படம் ரிலீஸ் ஆகாது என்று கூறப்படுகிறது.