Vir Hirani Lijo, A R Rahman
பாலிவுட் செய்திகள்

ஏ ஆர் ரஹ்மான் இசை, லிஜோ பெல்லிசேரி இயக்கம்... ஹீரோவாகும் வீர் ஹிரானி! | Vir Hirani

இப்படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார் லிஜோ. இந்தப் படத்திற்கு இசையமைக்க ஏ ஆர் ரஹ்மான் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

Johnson

பாலிவுட்டில் பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி. இவரது மகன் வீர் ஹிரானி விரைவில் ஹீரோவாக அறிமுகமாவதுதான் இப்போதைய செய்தி. ஏற்கெனவே ராஜ்குமார் ஹிரானி தயாரிப்பில் உருவாகி உள்ள `Pritam Pedro' என்ற வெப் சீரிஸில் லீட் ரோலில் நடித்துள்ளார் வீர் ஹிரானி.

Rajkumar Hirani

இப்போது இவரது அறிமுகப் படத்தை இயக்கப்போவது `ஆமென்', `அங்கமாலி டைரீஸ்', `ஜல்லிக்கட்டு' போன்ற முக்கியமான மலையாளப் படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இப்படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார் லிஜோ. இந்தப் படத்திற்கு இசையமைக்க ஏ ஆர் ரஹ்மான் ஒப்பந்தமாகி இருக்கிறார். City Lights, Aligarh போன்ற படங்கள், மிகப்பெரிய புகழ்பெற்ற Scam 1992 சீரிஸ் போன்றவரை இயக்கிய பாலிவுட் இயக்குநர் ஹன்சல் மெஹ்தா இப்படத்தை தனது True Story Films நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

படத்தின் மற்ற நடிகர்கள் தேர்வு, தொழிநுட்ப கலைஞசர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்க உள்ளது. இது ஒரு காதல் கதையாக உருவாகிறதாம்.