Rajinikanth Hum Mein Shahenshah Kaun
பாலிவுட் செய்திகள்

37 ஆண்டுகளுக்கு பின் வெளியாகும் ரஜினி படம்! | Hum Mein Shahenshah Kaun | Rajinikanth

மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளம், சலீம்-ஃபைஸ் வசனம், ஆனந்த் பக்ஷியின் பாடல் வரிகள், புகழ்பெற்ற இரட்டையர்களான லட்சுமிகாந்த்-பியாரேலால் இசை மற்றும் சரோஜ் கான் வடிவமைத்த நடன அமைப்பு என பிரம்மாண்டமாக தயாரானது படம்.

Johnson

ரஜினிகாந்த், சத்ருகன் சின்ஹா, ஹேமா மாலினி, அனிதா ராஜ், பிரேம் சோப்ரா, ஷரத் சக்சேனா, ஷரத் சக்சேனா, மறைந்த அம்ரிஷ் பூரி மற்றும் மறைந்த ஜக்தீப் எனப் பலரது நடிப்பில் ஹார்மேஷ் மல்ஹோத்ரா இயக்கிய இந்திப் படம் `Hum Mein Shahenshah Kaun'. பல்வேறு காரணங்களால் வெளியாகாமல் முடங்கிப் போன இப்படம் 37 ஆண்டுகளுக்கு பின் வெளியீட்டு தயாராகிறது.

1989ல் இந்தப்படம் ராஜா ராய் தயாரிப்பில் துவங்கப்பட்டது. மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளம், சலீம்-ஃபைஸ் வசனம், ஆனந்த் பக்ஷியின் பாடல் வரிகள், புகழ்பெற்ற இரட்டையர்களான லட்சுமிகாந்த்-பியாரேலால் இசை மற்றும் சரோஜ் கான் வடிவமைத்த நடன அமைப்பு என பிரம்மாண்டமாக தயாரானது படம். ஆனால் இப்படத்தின் முதன்மை படப்பிடிப்பு முடிந்த சமயத்தில் தயாரிப்பாளர் ராஜா ராய், லண்டனுக்கு வணிக ரீதியான விஷயங்களுக்கா இடம்பெயர்ந்தார். கூடவே அங்கு அவரின் இளம் மகனை காலமானதால் பெரும் துயரத்தை சந்தித்தார். இதனால் இப்படம் எதிர்பாராத விதமாக கைவிடப்பட்டது. இப்படத்தின் இயக்குநர் ஹார்மேஷ் மல்ஹோத்ரா மறைந்த நிலையில், இப்படத்தின் வேலைகளை தயாரிப்பாளர் ராஜா ராய் முடித்து அவரே இயக்குநராகவும் மாறியுள்ளார்.

Raja Roy

இப்போது சினிமா பார்வையாளர்களுக்கும், நடிகர்களின் ரசிகர்களுக்கும் கொண்டாட்டத்தை அளிக்கும் வகையில் தயாரிப்பாளர்கள் இப்படத்தை திரையரங்குகளுக்குக் கொண்டுவருவதில் உறுதியாக உள்ளனர். இது இப்போது AI- உதவியுடன் மறுசீரமைப்பு, 4K ரீமாஸ்டரிங் மற்றும் 5.1 சரவுண்ட் சவுண்ட் மாஸ்டரிங் ஆகியவற்றின் மூலம் படம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சினிமாவின் ஆன்மாவைத் தொந்தரவு செய்யாமல் சமகால சினிமாவின் தரத்திற்கு படத்தை கொண்டு வர முயன்று வருகிறார்கள்.


இதை பற்றி படத்தின் தயாரிப்பாளர் ராஜா ராய் கூறிய போது "இந்தப் படத்தின் மீதான நம்பிக்கையை நாங்கள் ஒருபோதும் இழக்கவில்லை. துக்கம், பின்னடைவுகள் மற்றும் நீண்ட மௌனத்தைத் இப்படம் கடந்து வந்துள்ளது. இன்று, இறுதியாக அதன் பார்வையாளர்களைச் படம் சந்திப்பதில் நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்தப் படம் எல்லா சவால்களையும் தாண்டி தப்பிப்பிழைத்து, வெளியாவது தான் அதன் விதி என நினைக்கிறேன்" என்றார்.