Regina Cassandra x page
பாலிவுட் செய்திகள்

"வார்த்தைகளால், செயல்களால் இழிவான முறையில்.." - பாலிவுட் குறித்து ரெஜினா | Regena Cassandrra

இந்தத் துறையில் ஒரு பெண்ணாக, ஒரே மாதிரியான வேடங்கள் கொடுக்கப்படுவது வழக்கமானது. இது ஒரு காட்சி ஊடகம் என்பதால், நீங்கள் எதையாவது பார்த்தவுடன், அது உங்கள் தலையில் அப்படியே பதிந்துவிடும்.

Johnson

தமிழில் `கண்ட நாள் முதல்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரெஜினா கசன்ட்ரா. தொடர்ந்து `கேடி பில்லா கில்லாடி ரங்கா', `ராஜதந்திரம்', `மாநகரம்', `சரவணன் இருக்க பயமேன்', `விடாமுயற்சி' எனப் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், இந்தி சினிமாவில் தன்னுடைய பயணம் பற்றி கூறிய ரெஜினா கசன்ட்ரா, "நான் ஒரு தென்னிந்திய நடிகை. பெரும்பாலான தென்னிந்தியர்களுடன் ஒப்பிடும்போது, ​​எனது இந்தி மிகவும் சிறந்தது. எனக்கு இந்தி படிக்க, எழுத, பேசத் தெரியும், மேலும் இதுவரை நான் இந்தி மொழியில் செய்த அனைத்துப் படங்களிலும் எனது சொந்தக் குரலில்தான் பேசி இருக்கிறேன். எனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்திற்கு ஏற்றவாறு நான் வாழ்கிறேன் என்பதை உறுதிப்படுத்த முயற்சித்தேன்”.

Regina Cassandra

இருந்தாலும், "தென் இந்தியாவிலிருந்து வந்தவர் என்பதால், அங்கு ஓர் அந்நியர்போல உணரவைக்கப்பட்டது" பற்றி கூறிய ரெஜினா, "நிறைய பேர் என்னை வார்த்தைகளால் மட்டுமல்ல, செயல்களாலும் இழிவான முறையில் நடத்தினர். மேலும், நான் ஒரு குறிப்பிட்ட வழியில் தாழ்த்தப்பட்டேன் என்று யாரால் வேண்டுமானாலும் சொல்ல முடியும். நான் அதை உணர்ந்தேன். எனவே, வடக்கில் எனக்கு சில தயக்கங்கள் இருந்தன. ஆனால், அது எப்போதும் அப்படி இருக்காது, இல்லையா?"

" `Kesari Chapter 2', `Rocket Boys', `Farzi', `Jaat' என தொடர்ச்சியாக இந்தியில் பணியாற்றினீர்கள். அதை எல்லாம் எப்படி சமாளித்தீர்கள்" என்றபோது, "நான் மிகவும் அன்பான நபர், அதனால் நான் என்னைச் சுற்றி இருப்பவர்களையும் அதனை உணர வைத்துவிடுவேன். நான் எந்தத் துறையில் இருந்தாலும், எப்படியோ அதை வீடுபோல உணர்ந்துகொள்வேன்."

”ஒரே போன்ற வேடங்கள் திரும்பத்திரும்ப கொடுக்கப்பட்டு stereotyped செய்யப்படுவது” பற்றி கேட்கப்பட, "இந்தத் துறையில் ஒரு பெண்ணாக, ஒரே மாதிரியான வேடங்கள் கொடுக்கப்படுவது வழக்கமானது. இது ஒரு காட்சி ஊடகம் என்பதால், நீங்கள் எதையாவது பார்த்தவுடன், அது உங்கள் தலையில் அப்படியே பதிந்துவிடும். ஆனால், நான் எப்போதும் பல்துறை திறன் கொண்டவனாக இருக்க விரும்பினேன். எனவே, எனது படங்களைத் தேர்ந்தெடுப்பது எனக்கு மிகவும் கடினம், ஏனென்றால், நான் எப்போதும் வெறும் வணிகப் படங்களில் மட்டும் நடிக்க விரும்பவில்லை”

Vidaamuyarchi

’’16 வயதில் நடிக்க துவங்கியவர், இப்போது 35 வயதை நிறைவு செய்துள்ளது’’ பற்றி கேட்கப்பட, "இது மிகவும் மேலோட்டமாக சொல்வதுபோல் தோன்றலாம். ஆனால், இந்த குறிப்பிட்ட துறையில் இருப்பதோ, நான் செய்யும் வேலையைச் செய்வதோ, உண்மையில் அவ்வளவு எளிதானது அல்ல. தொடர்ச்சியாக நான்கைந்து நாட்கள் ஷூட் என்றாலும், அதைப் பற்றி கேள்வி கேட்காமல் இருக்க வேண்டி இருக்கும். நான் மிகவும் அமைதியான நபர் என்று நினைக்கிறேன். ஆனால் சில நேரங்களில் உங்கள் ஆழ் மனதில், நீங்கள் சில விஷயங்களைப் பற்றிக்கொள்ள விரும்புகிறீர்கள். மேலும் இதெல்லாம் நான் இத்தனை ஆண்டுகளாக கற்றுக் கொண்டவை. இந்தப் பயணத்தின் வழியில், நான் கற்கிறேன், கற்றதில் சிலவற்றை கைவிடுகிறேன். இந்து ஒரு தொடர்சியாக நடக்கிறது."