Maharani Huma Qureshi
பாலிவுட் செய்திகள்

அடுத்த லெவலுக்கு செல்லும் மகாராணி, வெளியான 4வது சீசன் டீசர்! | Maharani | HumaQureshi

இதில் ஹூமா குரேஷி உடன் ஸ்வேதா பாசு பிரசாத், விபின் சர்மா, அமித் சியால், வினீத் குமார், ஷர்துல் பரத்வாஜ், கனி குஸ்ருதி மற்றும் பிரமோத் பதக் போன்ற நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

Johnson

ஹூமா குரேஷி நடிப்பில் 2021ல் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியான சீரிஸ் `மகாராணி' நிஜ சம்பவத்தை தழுவிய பொலிட்டிகள் த்ரில்லராக உருவானது இந்த சீரிஸ். இது வரை மூன்று சீசன்களாக வெளியான இந்த சீரிஸின் நான்காவது சீசன் நவம்பர் 7ம் தேதி வெளியாகிறது. இப்போது அதற்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

புனீத் பிரகாஷ் இயக்கத்தில், சுபாஷ் கபூரால் உருவாக்கப்பட்ட சீரிஸ் `மகாராணி 4' இதில் ஹூமா குரேஷி உடன் ஸ்வேதா பாசு பிரசாத், விபின் சர்மா, அமித் சியால், வினீத் குமார், ஷர்துல் பரத்வாஜ், கனி குஸ்ருதி மற்றும் பிரமோத் பதக் போன்ற நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த சீரிஸில் நடித்தது பற்றி ஹூமா குரேஷி கூறுகையில், "ராணி பாரதியின் பயணம் எப்போதும் வழக்கத்துக்கு மாறானதாகவே இருக்கும். ஆனால் இந்த சீசனில், அவரது லட்சியம் முற்றிலும் புதிய நிலையை எட்டுகிறது. இல்லத்தரசியாக இருந்து முதல்வர் ஆன அவர் பீகாரின் அரசியல் தளத்தையே உலுக்கினார். இப்போது, ​​அவர் நாட்டின் கடினமான போர்க்களத்தில் நுழைகிறார். மகாராணி 4 அடுத்த அத்தியாயம் மட்டுமல்ல; இது அவரது துணிச்சலான பாய்ச்சல்." எனக் கூறியுள்ளார்.