பாலிவுட்டின் முன்னணி நடிகை கத்ரீனா கைஃப். இவருக்கு நடிகர் விக்கி கௌஷலுடன் 2021ல் ராஜஸ்தானில் திருமணம் நடைபெற்றது. மிக நெருக்கமான நபர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். தொடர்ச்சியாக தங்களின் முக்கியமான தருணங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் இந்த நட்சத்திர தம்பதி, இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் தம்பதி தாங்கள் விரைவில் பெற்றோர் ஆக உள்ளதாக அறிவித்துள்ளனர். "மகிழ்ச்சியும் நன்றியும் நிறைந்த இதயங்களுடன் நம் வாழ்வின் சிறந்த அத்தியாயத்தைத் தொடங்கும் தருணத்தில்" என்ற வாசகத்துடன் தங்களின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். இந்த தம்பதிக்கு பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
`மெரி கிறிஸ்துமஸ்' படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருக்கும் கத்ரீனா, குழந்தை வளர்ப்புக்காக இடைவெளி எடுத்துக் கொண்டுள்ளார் என சொல்லப்படுகிறது. விக்கி கௌஷல் `Chhaava' படத்தின் வெற்றிக்குப் பிறகு சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் `Love & War' படத்தில் நடித்து வருகிறார்.