அமேசான் ப்ரைம் தளத்தில் கஜோல் மற்றும் டிவிங்கிள் கண்ணா தொகுத்து வழங்கும் Two Much With Kajol and Twinkle என்ற நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில், நடிகை ஜான்வி கபூர் மற்றும் இயக்குநர் கரண் ஜோஹர் கலந்து கொண்டனர். இதில் ஜான்வி கபூர் தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டது பற்றி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
சமூக ஊடகங்களினாலும், இப்படி தான் இருக்க வேண்டும் என்று கட்டமைக்கப்பட்ட தோற்றங்களிலும் ஈர்க்கப்பட்ட இளம் பெண்களில் நானும் ஒருத்தி. ஆனால் இந்த கருத்தை இளம் பெண்கள் ஏற்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. 'உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் எதையும் செய்' என்பதில் நான் நம்பிக்கை கொண்டவள். அனைத்து விஷயங்களையும் பற்றி நான் திறந்த புத்தகமாக இருப்பதை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.
நான் மிகவும் புத்திசாலி, பழமைவாதி மற்றும் சரியான விஷயங்களை செய்பவள். எனக்கு என் அம்மாவின் வழிகாட்டுதல் இருந்தது, அதை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மேலும், ஒரு எச்சரிக்கையும் கொடுக்கிறேன். ஏனென்றால் யாரவது ஒரு இளம் பெண் இது போன்ற ஒரு வீடியோவைப் பார்த்து, நானும் buffalo-plasty செய்து கொள்கிறேன் என சென்று, ஏதாவது தவறு நடந்தால் அது மிக மோசமான விஷயமாக மாறிவிடும். எனவே வெளிப்படைத்தன்மை முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.
எனது அம்மா நான் நடிக்க வேண்டும் என்று ஒருபோதும் விரும்பவில்லை; என் மீதான பாதுகாப்பைப் பற்றி சிந்தித்தார். எங்களுக்கு அனைத்து வழியிலும் நாங்கள் விரும்பிய அனைத்தும் கிடைத்தது. அதே நேரத்தில், நான் நடிகையாகக் கூடாது என்பதில் என் அம்மா கண்டிப்பாக இருந்தார்.
மக்கள் என்னை உடலில் முடி, இரட்டை சடை மற்றும் மீசையுடன் பார்த்தாலும் பரவாயில்லை என்பது போல் இருந்தார். இது எனக்கு மிகவும் மோசமான கவலையாக இருந்தது, ஏனென்றால் என் டீனேஜ் பருவத்தில் சமூக ஊடகங்களில் இது பெரிதாக விவாதிக்கப்பட்டது. எனவே தான் அறுவை சிகிச்சை செய்தேன்" என்று தெரிவித்தார்.