Ranveer, Deepika pt web
பாலிவுட் செய்திகள்

மகள் துவா புகைப்படத்தை வெளியிட்ட தீபிகா - ரன்வீர் தம்பதி! | Deepika|Ranveer| Dua Padukone Singh

அவ்வப்போது துவா தன் மடியில் இருப்பதைப் போல தொடர்ந்து பல புகைப்படங்களைப் பதிவிட்டு வந்தார் தீபிகா படுகோன். ஆனால் துவாவின் முகத்தை இதுவரை ரகசியமாகவே வைத்திருந்தார்.

Johnson

பிரபல பாலிவுட் நட்சத்திர தம்பதியான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் முதன் முறையாக தங்கள் மகள் துவா புகைப்படத்தை வெளியிட்டு உலகத்திற்கு அறிமுகம் செய்துள்ளனர்.

2018ம் ஆண்டு தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு செப்டம்பர் 2024-ல் பெண் குழந்தை பிறந்தது. இரு மாதங்கள் கழித்து நவம்பரில் தங்கள் குழந்தைக்கு துவா (பிரார்த்தனை எனப் பொருள்) எனப் பெயரிட்டுள்ளதாக அறிவித்தனர். அவ்வப்போது துவா தன் மடியில் இருப்பதைப் போல தொடர்ந்து பல புகைப்படங்களைப் பதிவிட்டு வந்தார் தீபிகா படுகோன். ஆனால் துவாவின் முகத்தை இதுவரை ரகசியமாகவே வைத்திருந்தார். சில வாரங்களுக்கு முன்பு விமான நிலையத்தில் தீபிகா மற்றும் துவா இருக்கும் வீடியோவில் வைரலானது; அப்போது தீபிகா, தன் மகளை புகைப்படம் எடுக்க வேண்டாம் என ரசிகரிடம் கேட்டிருந்தார்.

இந்நிலையில் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங், இதுவரை ரகசியமாக வைத்திருந்த தங்கள் மகள்  துவாவின் முகத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ளனர். தங்கள் மகளுடன் தீபாவளியைக் கொண்டாடும் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் குடும்ப புகைப்படத்தை பாலிவுட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர்.