Atlee Ranveer Singh
பாலிவுட் செய்திகள்

அட்லீ இயக்கத்தில் ரன்வீர் சிங், இசை சாய் அபயங்கர்? | Atlee | Ranveer Singh | Sreeleela | Bobby Deol

அட்லீ இயக்கத்தில் ரன்வீர் சிங், பாபி தியோல், ஸ்ரீலீலா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

Johnson

அட்லீ இயக்கத்தில் ரன்வீர் சிங், பாபி தியோல், ஸ்ரீலீலா நடித்துள்ள 'ஏஜெண்ட் ஜிங் அட்டாக்ஸ்' என்ற விளம்பரப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விளம்பர படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இது 8 நிமிட குறும்படமாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

சிஇந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்ற பட்டியலில் இடம்பிடித்தவர் அட்லீ. ஷாரூக்கான் நடித்த `ஜவான்' படத்திற்கு பின் அல்லு அர்ஜூன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சினிமாவில் பிளாக்பஸ்டார்களை கொடுத்தவர், இப்போது விளம்பரத்துறையில் காலடி பதித்துள்ளார். Ching's Secret என்ற உணவு தயாரிப்பு நிறுவனத்திற்காக அட்லீ இயக்கியுள்ள இந்த விளம்பரத்தில் ரன்வீர் சிங், பாபி தியோல், ஸ்ரீலீலா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். `ஏஜெண்ட் ஜிங் அட்டாக்ஸ்' என்ற இந்த விளம்பரப்படம்  இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. விளம்பரப்படத்தின் முழு வெர்ஷனை 8 நிமிட குறும்படமாகவும் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

ஷங்கர்–எசான்–லாய் இசையமைப்பில் உருவான புகழ்பெற்ற “மை நேம் இஸ் ரன்வீர் சிங்” என்ற ஆந்தம், இப்போது சாய் அப்யங்கர் மூலம் மறுபதிப்பாக உருவாக்கப்பட்டு, தற்போது இந்த விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Atlee

இதனைப் பற்றி கூறிய அட்லீ  “அன்பு தான் ரகசிய மூலப்பொருள். சிங், இந்தியா பார்க்காத ஒன்றை மட்டுமல்ல, அன்பையும் விரும்பினார், அதனால்தான் நான் எனது முதல் விளம்பரத்திற்கு சம்மதம் தெரிவித்தேன். ரன்வீரின் துறுதுறுப்பு, பாபி சாரின் மாயம் மற்றும் ஸ்ரீலீலாவின் புத்துணர்ச்சி, இதை நாங்கள் மிகுந்த முழுமனதுடன் சமைத்துள்ளோம். இப்போது பார்வையாளர்கள் ருசிக்க வேண்டும்." என்றார்.