Aamir Khan Ek Din
பாலிவுட் செய்திகள்

மகனின் படத்தைப் பார்த்து அழுத அமீர் கான்! | Aamir Khan | Ek Din | Sai Pallavi | Junaid Khan

இந்த நிகழ்வில் படத்தின் சில காட்சிகளில் ஜூனைத் கான் மற்றும் நடிகை சாய் பல்லவி ஆகியோரின் நடிப்பைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார் அமீர் கான்.

Johnson

பிரபல இந்தி நடிகர் அமீர் கானின் மகன் ஜூனைத் கான். இவர் 2024ஆம் ஆண்டு வெளியான `Maharaj' இந்திப் படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தற்போது இவர் சாய் பல்லவி உடன் இணைந்து சுனில் பாண்டே இயக்கத்தில் நடித்துள்ள படம் `Ek Din'. இப்படம் மே 1ஆம் தேதி வெளியாக உள்ளது. நடிகர் அமீர் கான்தான் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு இசை நிகழ்ச்சி மும்பையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் படத்தின் சில காட்சிகளில் ஜூனைத் கான் மற்றும் நடிகை சாய் பல்லவி ஆகியோரின் நடிப்பைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார் அமீர் கான். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இந்நிகழ்வில் ஒரு பாடலையும் பாடி அசத்தினார் அமீர்.

படக்குழுவினரைப் பாராட்டிய அமீர் கான், "சாய் பல்லவி மிகச் சிறப்பாக நடித்துள்ளார். என் மனதிலிருந்து சொல்வதென்றால், இந்தியாவிலேயே சிறந்த நடிகை அவர்தான்" என்று பாராட்டினார். இது இந்தியில் சாய் பல்லவியின் அறிமுகப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனது மகனைப் பற்றிப் பேசியவர், "ஜூனைத் மிக நல்ல நடிப்பக் கொடுத்திருக்கிறார்" என்றார். தற்போது இந்நிகழ்ச்சி சார்ந்த வீடியோக்கள் ட்ரெண்டிங்கில் இருக்கின்றன.