பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஆமீர்கான். இவர், இன்று தனது திருமணத்தை அறிவித்துள்ளார். ஓராண்டாக பெங்களூருவைச் சேர்ந்த கௌரி உடன் லிவ் இன் வாழ்க்கையில் இருந்து வந்தார் ஆமீர். ஜூலை 5ஆம் தேதி எளிய முறையில் மும்பை பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் கெளரியை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். இதுதொடர்பாக ஆமீர்கான் இன்று அளித்த பேட்டியில், `எளிய முறையில் ஐந்தாம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். இது மிகவும் நெருங்கிய நபர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் திருமணம். உங்கள் அனைவரது ஆசிர்வாதமும் எங்களுக்கு தேவை. எங்களை நீங்கள் ஆசிர்வதிக்கவேண்டும்' என்று தெரிவித்தார்.
திருமணத்தில் ஆமீர்கான் குடும்பம், கெளரி குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். ஆமீர்கான் திருமணத்தை அவரது மூன்று பிள்ளைகளும் முன்னின்று நடத்த உள்ளார்களாம். ஆமீர்கான் ஏற்கெனவே ரீனா தத் மற்றும் கிரண் ராவ் ஆகியோரை திருமணம் செய்து இரண்டு பேரையும் விவாகரத்து செய்துவிட்டார். இப்போது கெளரியை திருமணம் செய்ய இருக்கிறார். கெளரிக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். கெளரிக்கு முதல் திருமணத்தின் மூலம் ஒரு மகன் இருக்கிறான்.
ஆமீர்கான், இரண்டு மனைவிகளையும் விவாகரத்து செய்துவிட்டபோதிலும் அவர்களுடன் தொடர்ந்து நட்பான சுமூக உறவைப் பேணுகிறார். பெங்களூருவில் உள்ள அவரது உறவினர் மூலம் கௌரி ஸ்ப்ராடை சந்தித்திருக்கிறார் ஆமிர்கான். கடந்த ஆண்டு தனது 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அமீர் அவரை தனது லிவ் இன் பார்ட்னரை அறிமுகப்படுத்தினார். இருவரும் அவரது பாந்த்ரா இல்லத்தில் ஒன்றாக வசித்து வந்தனர். மேலும் கடந்த மாதம் கௌரியை திருமணம் செய்துகொள்வதாக ஆமீர் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.