சினிமா

தனி விமானம் மூலம் இன்று இந்தியா வருகிறது ஸ்ரீதேவியின் உடல்

தனி விமானம் மூலம் இன்று இந்தியா வருகிறது ஸ்ரீதேவியின் உடல்

Rasus

துபாயில் மாரடைப்பால் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று காலை இந்தியா கொண்டுவரப்படவுள்ளது.

துபாய் நாட்டின் சட்ட ரீதியான நடைமுறைகள் முடிந்து ஒப்படைக்கப்பட்டவுடன் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று மும்பை கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கபூர் குடும்பத்தின் செய்தித்தொடர்பாளர் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். இதற்காக, பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியில் தனி விமானம் துபாய் சென்றடைந்துள்ளது.

இதற்கிடையில், இன்று காலை 9 மணி முதல் 11.30 வரை ஸ்ரீதேவியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு நண்பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ளதாக ஸ்ரீதேவியின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.