தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தாழ்த்தப்பட்டோர் பற்றி தரக்குறைவாக பேசியதாக பாலிவுட் நடிகர் சல்மான்கான் மற்றும் நடிகை ஷில்பா ஷெட்டி மீது புகார் எழுந்துள்ளது.
பாலிவுட் திரையுலகில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் பிரபலங்களில் நடிகர் சல்மான்கானும் ஒருவர். இவர், நடித்த படங்களில் தொடங்கி, இவர் கலந்துக் கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சிகள் வரை இவர் கூறும் கருத்துகள் மற்றும் நிகழ்வுகள் இதுவரை பல சர்ச்சைகளை எழுப்பிள்ளன. இந்நிலையில், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை தரக்குறைவாக பேசியதாக நடிகர் சல்மான்கான் மற்றும் ஷில்பா ஷெட்டி மீது புதிய புகார் எழுந்துள்ளது.
இதை தொடர்ந்து ஒரு வாரத்துக்குள் இந்தப் புகார் குறித்து விசாரித்து பதில் அளிக்கும்படி டெல்லி மற்றும் மும்பை மாநகர காவல்துறை ஆணையருக்கும், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் கவனத்துக்கு இந்தப் புகார் கொண்டு செல்லப்பட்டதை அடுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.