சினிமா

போட்டோஷூட்டுக்கு ரூ. 1 கோடி வாங்கிய நடிகை!

போட்டோஷூட்டுக்கு ரூ. 1 கோடி வாங்கிய நடிகை!

webteam

பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வருகிறது. 

இலங்கையில் இருந்து பாலிவுட்டில் களமிறங்கியுள்ள ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி சலசலப்பை ஏற்படுத்துவார். இப்போது அவர் ஒரு ஆங்கில வார இதழுக்கு அளித்த போட்டோஷூட் அவர் மீது கவனத்தை ஈர்க்க வைத்திருக்கிறது. கவர்ச்சியான அவரது போஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோ ஷூட்டுக்கு அவர் ரூ.1 கோடி பெற்றிருக்கிறார்.

ஆங்கில இதழ்களுக்கு பல நடிகைகள் போஸ் கொடுத்திருந்தாலும் இதுவரை யாரும் இவ்வளவு அதிக தொகையை சம்பளமாக பெற்றதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஒரு போட்டோ ஷூட்டுக்கு இவ்வளவு தொகையா என பாலிவுட் நடிகைகளும் வாயடைத்து திகைக்கிறார்கள். அதுமட்டுமா? திகைத்து கிடப்பது ஆங்கிலப் பத்திரிக்கைகளும்தான். ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் 1 கோடி ரூபாய் பெற்றதைத் தொடர்ந்து இனி மற்ற நடிகைகளும் போடோஷூட்டுக்கான சம்பளத்தை அதிகம் கேட்பார்கள் என திகிலடைந்து கிடக்கிறார்கள்.