சினிமா

'விக்ரம் 60' படத்தில் நடிக்கும் பாபி சிம்ஹா !

'விக்ரம் 60' படத்தில் நடிக்கும் பாபி சிம்ஹா !

jagadeesh

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம்- துருவ் விக்ரம் நடிக்கும் "விக்ரம் 60" படத்தில் பாபி சிம்ஹா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

விக்ரம் மற்றும் அவருடைய மகன் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்தாண்டு வெளியானது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதனையடுத்து அண்மையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

மேலும் இன்று தொடர்ச்சியாக ஒரு மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் மூன்று மாதங்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது. இந்த த்ரில்லர் படத்தில் சிம்ரன், வாணி போஜன் நடிக்கிறார்கள். இந்நிலையில் இத்திரைப்படத்தில் இப்போது பாபி சிம்ஹா இணைந்துள்ளார்.

பாபி சிம்ஹா ஏற்கெனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய "பிட்சா", ஜிகர்தண்டா ஆகிய படங்களில் நடித்தார். இதில் ஜிகர்தண்டா படத்திற்காக பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருது கிடைத்தது. பின்பு, "பேட்ட" படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் விக்ரம் 60 திரைப்படத்தில் பாமி சிம்ஹா இணைந்துள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.