மகாராஷ்டிராவில் தண்ணீர் என நினைத்து சானிடைசர் குடித்த அதிகாரியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
மும்பை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தில் இணை ஆணையர் ரமேஷ் பவார் தண்ணீர் எனக் கருதி சானிடைசரைக் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் அந்த அதிகாரி மிகவும் பரபரப்பாக அருகில் இருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். பேசிக் கொண்டிருந்த வாக்கிலே அவர் தனக்கு பின்புறம் இருந்த பாட்டிலை எடுத்து அதில் இருந்ததை தண்ணீர் என நினைத்து குடித்துள்ளார். அது வாயில் பட்டதும்தான் சானிடைசர் என தெரியவந்தது. அவரும் துடித்துப் போனார். இவையெல்லாம் அங்கிருந்த கேமிராவில் பதிவாகியுள்ளது.
ஏற்கனவேம் போலியோ சொட்டு மருந்து முகாமில் 12 குழந்தைகளுக்கு சானிடைசரை அளித்தது சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.