சினிமா

முடிவுக்கு வந்தது பில்லா பாண்டி பஞ்சாயத்து !

முடிவுக்கு வந்தது பில்லா பாண்டி பஞ்சாயத்து !

webteam

பில்லா பாண்டி படப்பிடிப்பின் போது ஏற்பட்ட பிரச்சினை தீர்ந்ததை அடுத்து ஷூட்டிங் மீண்டும் தொடங்கியது. 

ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடித்து வரும் படம் 'பில்லா பாண்டி. 'தர்மதுரை'க்குப் பிறகு ஸ்டுடியோ 9 சார்பில் அவரே தயாரித்து வருகிறார். சரவண சக்தி இயக்கும் இந்தப் படத்தில் ஆர்.கே.சுரேஷ், அஜீத் ரசிகராக வருகிறார். இதன் படப்பிடிப்பு மதுரைப் பகுதிகளில் நடைபெற்று வந்தது. அலங்காநல்லூரில், தேர்த்திருவிழா காட்சி படமாகிக் கொண்டிருந்தபோது, ஏராளமான கூட்டம் கூடியிருந்தது. அந்தச் சூழலில் தொழிலாளர் பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்பு தடைபட்டது. 

இதையடுத்து, இந்தப் பிரச்சினை குறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், திரைப்படத் தொழிலாளர் சங்கமான பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோரிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி பிரச்னையை தீர்த்தனர். இரண்டு நாட்கள் நிறுத்தப்பட்டிருந்த பில்லா பாண்டி படப்பிடிப்பு நேற்று மீண்டும் தொடங்கியது .