Cool Suresh
Cool Suresh Bigg Boss
பிக்பாஸ்

BIGG BOSS 7 | சாபக்கல்லை பெற்ற கூல் சுரேஷ்... இந்த வாரம் எலிமினேட் ஆவாரா?

Jayashree A

கூல் சுரேஷ் ஹாட் சுரேஷான கதை தெரியுமா? மத்தவர்களுக்கு ஆருடம் சொன்ன அவரால், தனது ஆருடத்தை கணிக்கமுடியாமல் போனது ஏன் தெரியுமா? பார்ப்போம்...

பிக்பாஸ் 16ம் நாளான நேற்று எபிசோடின் தொடக்கத்தில், கூல் சுரேஷ் அனைவரையும் எண்டர்டெயின்மெண்ட் செய்யும் விதமாக அவருக்கு ஒரு டாஸ்க் தரப்பட்டது. அதை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்தி, தான் சொல்ல நினைத்ததை ஆரூடம் சொல்வது போல மாற்றி எல்லாவற்றையும் புட்டு புட்டு வைத்துவிட்டார். அங்கிருக்கும் போட்டியளார்களும் ‘அய்யோ சூப்ப்பரோஓஓஓ சூப்பர்ர்ர்ர்’ என்பதுபோல கத்தி கூப்பாடு போட்டு, “காமெடி என்றால் கூல் அண்ணாதான்” என்ற ரீதியில் சிரித்து மகிழ்ந்து அவரை சப்போர்ட்டை செய்தனர். இதையெல்லாம் பார்க்கையில், ‘கண்டிப்பாக இவர்களின் நாமினேஷன் ஓட்டு நம்ம மேல விழாது, கூடியவரைக்கும் எல்லாரையும் சிரிக்கவச்சு எல்லாருக்கும் நல்லவராகிடலாம்’ என்று கூல் சுரேஷ் நினைத்திருக்ககூடும்.

Cool Suresh

அதனால்தானோ என்னவோ தமிழண்டா என்று கத்தும் பொழுதும், சொன்னதை அழிப்பதும் என்று தனக்கென்று ஒரு ஸ்டைலை பயன்படுத்தி வந்தார்.

இப்படியே போய்க்கொண்டிருந்த நேற்றைய எபிசோடில் ஒருகட்டத்தில் மக்களின் சிம்பத்தியை பெற்றுக்கொள்ள தனது வாழ்க்கையை ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் கதையுடன் ஒப்பிட்டு, தனது அம்மாவுக்கும் தனது மனைவிக்கும் ஒத்துவராது என்று கூறினார். “இதில் நான்தான் மிகவும் துன்பப்படுகிறேன்” என்றெல்லாம் சொல்லி ஒரு கட்டத்தில் அழுதே விட்டார்.

அடடா இவருக்குள் இப்படி ஒரு சோகமா என்று நினைப்பதற்கு பதில், “இது எல்லார் வீட்டிலும் நடக்குறது தானே... மாமியார் மருமகள் என்றாலே சண்டைதானே வரும்? அதை சரிபண்ணுவது தானே ஒரு குடும்ப தலைவரின் கடமை” என்றாகிவிட்டது அங்கிருந்தவர்களுக்கு.

கூல் சுரேஷ்

இது இப்படி இருக்க... அடுத்த இன்னொரு டாஸ்க் ஒன்றை பிக்பாஸ் அங்கிருந்தவர்களுக்கு கொடுத்து இருக்கிறார். அதன்படி ஒரு சாபக்கல் ஒன்றை நடுக்கூடத்தில் வைத்திருக்கிறார் பிக்பாஸ். போட்டியாளார்கள் ஒன்றுகூடி, அதை யாரிடத்தில் கொடுக்கவேண்டும் என்று முடிவு செய்து அவரிடத்தில் இக்கல்லை ஒப்படைக்க வேண்டுமாம்.

அந்த கல்லை பெற்றுக்கொண்டவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்லவேண்டும். அத்துடன் அடுத்த வாரம் அவர் ஓட்டே இல்லாமல் நாமிநேஷன் செய்யப்படுவார் என்பது ரூல்ஸ். ‘அச்சச்சோ, பயங்கர சாபமாச்சே இது.... இதற்கு கண்டிப்பாக ஜோவிகாதான் சரியாக இருப்பார்’ என்று நாம் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில்,

சாபக்கல்

போட்டியாளார்கள் அனைவரும் கூல் சுரேஷை சொல்ல... நாமே அதிர்சியானோம்...! என்னப்பா கொஞ்சம் முன்னாடிதான் உங்களுக்கு ஜோசியம் எல்லாம் சொல்லி உங்களின் எதிர்காலத்தை புட்டு புட்டு வச்சாரு... எல்லாரும் சந்தோஷப்பட்டீங்க... அவருக்கா இந்த நிலை? என்று நாமே நினைத்துவிட்டோம். இதே வருத்தம் கூல் சுரேஷுக்கும் வர, கடுப்பாகி கத்த ஆரம்பித்தார்.

“நான் இளச்சவாயனா... ஏமாந்தவன் ஒருத்தன் கிடைச்சா நீங்க வச்சு செய்ய நான் ஆளா..?” என்று தனது ஆக்ரோஷத்தை வெளிபடுத்திய பொழுது அவரின் உண்மையான முகம் வெளிவரத் தொடங்கியது. இதுவரை தமிழண்டா என்று கத்தும் போதும், “ஜெஸ்ஸி ஜெஸ்ஸி” என்று சொல்லும் போதும் அவரை ரசித்த போட்டியாளார்கள்கூட, டாஸ்க் என்று வரும்பொழுது கூல் சுரேஷை கண்டு சற்றே அதிர்ச்சியாகியிருப்பர்.

கூல் சுரேஷ்

இதுநாள்வரை அவர் செய்த காமெடி, சொன்ன சிம்பத்தி எல்லாமே ஒரு நிமிடத்தில் வேஸ்ட்டாகி போனது வேதனைக்குரிய விஷயம். ஒருவேளை ‘இவர்தான் நம்ம எல்லார்கிட்டயும் நல்ல பெயர் எடுக்குறார், ஸோ நமக்கு டஃப் கொடுக்கும் போட்டியாளர் இவர்தான்’ என்று நினைத்துகூட ஹவுஸ்மேட்ஸ் இவரை சாபக்கல் கொடுக்க தேர்ந்தெடுத்திருக்கலாம்.! ஹூம்... என்னவோ... எல்லாம் பிக்பாஸூக்கே வெளிச்சம்!

இனி வரும் நாட்களில் இந்த சாபக்கல் இவரிடமே இருக்கிறதா அல்லது வேறு யாரிடமும் செல்கிறதா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.