BB7 DAY 2
BB7 DAY 2 PT Prime
பிக்பாஸ்

BIGGBOSS Day 2: சண்டை STARTS..! இன்னிக்கு என்ன சம்பவம் நடந்துச்சு?

Jayashree A

பிக் பாஸ் இரண்டாம் நாளான நேற்று, பிக் பாஸ் உத்தரவின் படி பிக்பாஸ் வீட்டிலிருப்பவர்களை ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் வித்தியாசமான முறையில் (பாத்திரத்தை உடைத்து, தட்டி என்று பல ஒலிகளை எழுப்பி) எழுப்புகின்றனர்.

சரி ஏதேனும் ஸ்வாரஸ்யமான விஷயம் நடக்கப்போகிறதா என்று நாம் யோசித்த சமயத்தில் அதற்கு பஞ்சமில்லாமல் பல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன. பார்ப்போமே அதையும்...!

மணிச்சந்திரா அடிக்கடி ரவீனாவுடன் வந்து பேசுகிறார். “ஏன் சோகமா இருக்க… உனக்கு கவலையா இருக்கா“ என்று பேசுவது இருவருக்குள்ளும் உள்ளது நட்பா? அல்லது காதலா? இவர்கள் இயல்பாகத்தான் பேசுகிறார்களா? அல்லது வேண்டுமென்றே பேசுகிறார்களா? என்ற குழப்பத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

BB7 DAY 2

இப்படி நாம் குழம்பிக்கொண்டே இருக்கும் சமயம், “டேய்…. ஏண்டா நீங்களெல்லாம் சும்மா இருக்கீங்க“ என்பது போல ஹவுஸ் கிளினிங் டாஸ்க் ஒன்றை வைக்கிறார் பிக்பாஸ். இதில் பிக்பாஸ் வீடு வெற்றி பெற, குக்கிங்கோடு சேர்த்து கிளினிங் வேலையும் ஸ்மால் பாஸ் வீட்டினர் தலையில் வந்து விழுகிறது.

'அச்சச்சோ…' என்று நாம் வருத்தப்பட்ட நேரத்தில் நம்முடன் பிக்பாஸும் ஸ்மால் வீட்டினரை பார்த்து வருத்தப்பட்டிருக்கிறார். அதனால்தானே என்னவோ அவரே, ஸ்மால் பாஸ் வீட்டினரை பார்த்து, ”அடுத்த டாஸ்க்கை விளையாடும் போது டீமை கவனமாக தேர்ந்தெடுங்கள். இல்லையென்றால் பாத்ரூம் கிளினிங்கும் உங்க தலையில விழும்” என்றார்.

அடுத்து வந்த, “வெல்கம் டூ கழுவப்போறது யாரு? ” டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டிலிருந்து விக்ரமும், ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்து ரவீனாவும் விளையாடுகின்றனர். இதில் ரவீனா தோற்று விடுகிறார். எனவே மறுபடியும் பாத்ரூம் கழுவும் வேலையும் ஸ்மால் பாஸ் வீட்டினர் தலையிலேயே வந்து விழுகிறது.

BB7 DAY 2

உதவி செய்ய போய் உபத்திரமான கதை:

இது இப்படி இருக்க… இவர்களின் மேல் பரிதாபம் கொண்டு உதவி செய்ய போய் உபத்திரமான கதையும் இதில் இருக்கிறது. அதன்படி விசித்திராவும், யுகேந்திரனும், ஸ்மால்பாஸ் வீட்டினருக்கு சமையலில் உதவி செய்ய செல்கின்றனர். இதைப்பார்த்த பிக்பாஸ் அவர்கள் இருவரின் மூட்டையையும்கட்டி, “இருவரும் அங்கேயே இருங்க” என்று ஸ்மால் பாஸ் வீட்டிற்கு மொத்தமாக அனுப்பி விட்டார். இதனால் இருவரும் நிகழ்ச்சி முடியும் வரை சப்பாத்தி சுட்டபடியே இருந்தனர்.

அத்தோடு விட்டாரா ப்ரதீப்?

இது இப்படி இருக்க… யுகேந்திரனும், விசித்திராவும், ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்றது ப்ரதீப் வயிற்றில் புளியை கரைத்திருக்க வேண்டும். “அவர்கள் வாங்கிய மளிகை கடனை நான் எதுக்கு அடைக்கனும். என்னை கேட்காமல் சாப்பாட்டு மெனுவை ஆடர் தந்துவிட்டீர்கள். எனக்கு சப்பாத்தி குருமா வேண்டாம், சிக்கன் ஃப்ரைதான் வேண்டும்” என்று போர்டில் எழுதி மணி அடிக்க ஆரம்பித்துவிட்டார் பிரதீப். இப்படி அவர்களுக்குள்ளேயே பிரச்னை வெடிக்க ஆரம்பித்தது.

BB7 DAY 2

இதற்கு நடுவில், நடக்கறதெல்லாம் நடக்கட்டும், நான் நடுவுலதான் நிப்பேன் என்கிற மாதிரி, அடிக்கடி கூல் சுரேஷ் “தமிழண்டா… தமிழண்டா” என்று கத்துகிறார். இதில் கடுப்பான விசித்ரா… “இன்னொரு தடவ கத்தின… கரண்டி பறக்கும்” என கறாராக சொல்ல, கூல் சுரேஷை அதற்குப்பிறகு காணவில்லை.

கடைசியாக பிக்பாஸ் ”கோல்டு ஸ்டார்” டாஸ்க் ஒன்றை வைத்தார். இதில் அதிகப்படியாக கோல்டு ஸ்டார் வைத்திருப்பவர்கள் நாமினேஷனிலிருந்து தப்பிக்கலாம் என்ற நிபந்தனையுடன் கிசுகிசு டாஸ்க் ஆரம்பித்தது. இதில் சரவண விக்ரம் வெற்றி பெற்றார். இத்துடன் நேற்றைய பிக்பாஸ் முடிந்தது. அடுத்து இன்று என்ன நடக்கும் என்பதை நாளை பொறுத்திருந்து பார்க்கலாம்!