Bigg Boss 7
Bigg Boss 7 vijay tv
பிக்பாஸ்

பிக்பாஸ் 7: "தயாரிப்பாளர்கள் செய்யும் தவறு என்னவென்றால்... " கமல் பேச்சு

Jayashree A

பிக்பாஸ் 84-வது நாள்

பிக்பாஸ் ஆரம்பித்ததும், கமல் அகம் டீவி வழியாக அகத்திற்குள் சென்றதும், ”போட்டியாளர்களின் கோல் என்ன?” என்ற கமலின் கேள்விக்கு, அனைவருமே ஒட்டு மொத்தமாக ’எங்களுக்கு சினிமாதான் எல்லாமே’ என்கின்றனர்.

”வாய்ப்பு கிடைத்தால் பாடலாசிரியராகவும், நடன இயக்குனராகவும், நடிகராகவும், இயக்குனராகவும், காமெடியனாகவும் வர விருப்பம் “என்று அவரவர் கனவை கூறினர்.

கமல் சிறு வயதில் இயக்குனராக விருப்பப்படவும், பாலசந்தர் அவரை, “ இயக்குனர் என்னடா... நீ சினிமா நட்சத்திரமாகவே ஜொலிக்கப்போற...” என்று என்னை தட்டிக்கொடுத்தார்” என்றார்.

”மன்மதலீலை என்ற படத்தில் எம்ஜியாரிடம் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் என்னிடம் இப்பொழுது நீ என்ன படம் பண்ணிக்கொண்டிருக்கிறாய் என்று கேட்டார். நான் பேசத்தெரியாமல், நான் மன்மதலீலை என்ற படம் பண்ணுகிறேன். நல்ல படம் பண்ணும்பொழுது நான் உங்களிடம் சொல்கிறேன். நீங்கள் அவசியம் வந்து பாருங்கள் என்றேன். அப்படீனா நீ கெட்ட படமும் பண்ணுவியா? என்றார்.

விஷ்ணு பேசும்பொழுது, "மாயாக்கு கூட உங்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சுருக்கு, அது மாதிரி எனக்கும் கிடைக்கணும்” என்றபோது, ”நீங்க ஏன் அவங்கள சொல்றீங்க... என்ன சொல்லுங்க “ என்று கமல் ஆரம்பிக்கும்போது மாயாவின் முகத்தில் 1000 வாட்ஸ் பல்பு எரிந்தது.

நாம் கூட வேறுமாதிரி யோசித்தோம். அதாவது “நீங்க ஏன் அவங்கள சொல்றீங்க; என்ன சொல்லுங்க, எனக்குகூட மாயா கூட நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது” என்று கமல் சொல்லவந்ததாக தோன்றிய சமயத்தில் அவர் சொன்னது, “ நீங்க ஏன் அவங்கள சொல்றீங்க; என்ன சொல்லுங்க, சிவாஜி சார்கூட நடிக்கிற வாய்ப்பு எனக்கு கிடைச்சது” என்றதும் மாயா முகத்தில் அசடு வழிந்ததை பார்க்கமுடிந்தது.

வார்த்தைகள் தடுமாறக் கூடாது, தவறாக சித்தரிக்கப்படக்கூடாது என்றுதான் “கண்டேன் சீதையை” என்று அனுமன் சொல்லியதாக ராமாயணத்தில் இருக்கும். ஒரு சில விநாடிகள் போதும், நம் எண்ணம் உச்சத்தை அடைய... அது ஏமாற்றம் தரும்பொழுதுதான் நம்மால் தாங்கிக்கொள்ள முடியாது.

கமல் மேலும் பேசுகையில், “இந்த கால தயாரிப்பாளார்கள் செய்யும் தவறு என்னெவென்றால், இவருக்காக கதை சொல்கிறோம்.. அவருக்காக கதை சொல்கிறோம்... என்கிறார்கள். முதலில் நீங்க கதை சொல்லுங்கள்.. நாங்கள் இவரா அவரா என்பதை முடிவு செய்துகொள்கிறோம் என்று மெய்யப்பசெட்டியார் மாதிரி, வாசன் சார் மாதிரி தைரியமாக சொல்லும் தயாரிப்பாளர்களோ, இயக்குனர்களோ அதிகம் கிடையாது. அதை நாம் உடைக்கவேண்டும். நான் சினிமாவின் ரசிகன்.. அதனால் நான் இந்த தப்பை பண்ணமாட்டேன்.

“ குறைந்தது 200 பேராவது ஒன்றினைந்தால்தான் ஒரு சினிமாவை எடுக்கமுடியும். அதேபோல் இந்த பிக்பாஸ் நிகழ்சிக்கு பின்னால் குறைந்தது 200 பேரின் உழைப்பு இருக்கிறது. அதனால் எல்லோருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. சின்ன படங்கள், நல்ல சிந்தனையாளார்கள், நல்ல இயக்குனர்கள் இல்லாமல் இந்த இண்டஸ்ட்ரி இயங்கமுடியாது. நட்சத்திர நடிகரை வைத்துக்கொண்டு மட்டும் சினிமா இயங்கமுடியாது. ” என்று அழுத்தி கூறுகிறார்.

அடுத்ததாக இந்தவார எவிக்சனில் விக்ரம் வெளியேறினார்

புத்தக பரிந்துரை:

திரு அம்பேத்கர் அவர்கள் எழுதியது, “அம்பேத்கர் இன்றும் என்றும் ”என்ற புத்தகத்தை பரிந்துரைத்தார். ”நமக்கு சந்தேகம், கோபம், ஆதங்கம் வரும்பொழுதெல்லாம் இப்புத்தகத்தை எடுத்து படித்தால் நமக்கு பதில் கிடைக்கும். சுரண்டலுக்காகவே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஆயுதம் ஜாதி. காதல் வந்தால் ஏற்றத்தாழ்வு அடிபடும், ஏற்றத்தாழ்வு அடிபட்டால், ஊரை நான்காகபிரிக்கமுடியாது, காதலை முதலில் தடை செய்யுங்க என்பவர்கள் படிக்க வேண்டிய புத்தகம். ஆதலினால் காதல் செய்வீர்” என்கிறார்.

இனி பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்க இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.