சினிமா

விஜய்யின் ’தளபதி 65’ படத்தில் இணைந்த ’பிக்பாஸ்' கவின்!

sharpana

விஜய்யின் ‘தளபதி 65’ படத்தில் பிக்பாஸ் புகழ் கவின் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

’மாஸ்டர்’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘தளபதி 65’ படத்தில் நடிக்கிறார். பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இன்று இப்படத்தின் பூஜைப் படங்கள் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளன. இந்நிலையில், இப்படத்தில் ’பிக்பாஸ்’ புகழ் கவின் இணைந்துள்ளார். ’சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் தனது தனித்துவ நடிப்பால் கவனம் ஈர்த்த கவின், பிக்பாஸ் மூலம் புகழடைந்தார்.

ஏற்கனவே, ’நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தில் நடித்திருந்தார். தற்போது வினீத் இயக்கத்தில் ‘லிஃப்ட்’ படத்தில் ஹீரோவாக நடித்துள்ள கவின், அடுத்ததாக ’தளபதி 65’ படத்தில் இணைந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை நிரூபிக்கும் விதமாக இன்று நடந்த பூஜையிலும் விஜய்யுடன் கவின் கலந்துகொண்ட புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கவின் இப்படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் என்றும் விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

நடிகர் கவின் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள ’டாக்டர்’ படத்தில் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்து வருகிறார் என்று சொல்லப்படுகிறார். நெல்சன் திலீப் குமார் இயக்குநராவதற்கு முன்பே விஜய் டிவியில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கவினும் விஜய் டிவி சீரியல் நிகழ்ச்சிகளில் பணிபுரிந்தார். அந்த நட்புதான் தளபதி 65 படத்தில் இணைய வைத்துள்ளது என்று சொல்லப்படுகிறது.