சினிமா

பிக்பாஸால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை இல்லை: கமல் தரப்பு மனு

பிக்பாஸால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை இல்லை: கமல் தரப்பு மனு

webteam

பிக்பாஸ் நிகழ்ச்சியால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படவில்லை என்று நடிகர் கமலஹாசன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடைகோரும் வழக்கில் கமலஹாசன் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.
பதில் மனுவில்பிக்பாஸ் நிகழ்ச்சியால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படவில்லை. இந்த வழக்கில் தமிழக அரசை சேர்த்தது தவறு, மத்திய அரசு அல்லது கண்காணிப்பு குழு மட்டுமே ஆராய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மத்திய அரசு பதிலளிக்க ஒருவாரம் அவகாசம் வழங்கிய உயர்நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்துள்ளது.