சினிமா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினாரா நடிகை ஓவியா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினாரா நடிகை ஓவியா?

webteam

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகை ஓவியா வெளியேறி விட்டரா என்ற கேள்வி தான் தற்போது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக கருதப்படுகிறது.  

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுப்பில் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியின் மூலம் அதிக பிரபலம் அடைந்திருப்பவர் நடிகை ஓவியா. நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மற்றவர்களால் பலமுறை ஓவியா வெளியேறும் சூழல் ஏற்பட்ட போதும், நேயர்களின் வாக்குகளை அதிக அளவில் பெற்று ஓவியா நிகழ்ச்சியில் தொடர்ந்து இடம்பிடித்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை பிக் பாஸ் அரங்கில் இருந்து ஓவியா வெளியேறி விட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சேனல் தரப்பிலோ, நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தரப்பிலோ இதுகுறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் பாகுபலி முதல் பாகம் ரிலீசான பின்பு இணையத்தில் கலக்கிய கேள்விகளில் மிக முக்கியமானது "பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்" என்பது தான். அதுபோல தற்போது "ஓவியா ஏன் வெளியேறி விட்டாரா?" என்ற கேள்வி வைரலாகி வருகிறது.