கொரோனா சூழலால் தடைபட்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் செப்டம்பரிலிருந்து மீண்டும் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட கொரோனா தொற்று அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரேசில் என்று உலக நாடுகளிலெல்லாம் பரவி கடந்த மார்ச் மாதம் இந்தியாவிற்குள் நுழைந்தது. அதனால், கடந்த மார்ச் 24 ஆம் தேதியிலிருந்து பிரதமர் மோடி ஊரடங்கை அறிவித்தார். இதனால், சினிமா மற்றும் சின்னத்திரை படபிடிப்புகள் அனைத்தும் தடைப்பட்டு போனது.
சினிமா ஷூட்டிங் நடக்காவிட்டாலும் மாநில அரசுகள் சின்னத்திரை ஷூட்டிங்கை சமூக இடைவெளியுடன் நடத்திக்கொள்ள அனுமதி அளித்திருந்தது. வெளிநாடுகளில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவிலும் ஹிட் அடித்தது. ரசிகர்கள் அதிகமானதால் பல மாநில மொழிகளில் வரத்துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கொரோனா தடைபோட்டது.
இந்நிலையில், கொரோனாவால் முடங்கிப்போன பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியில் மீண்டும் உயிர் பெற்றுள்ளது. தனியார் சேனலில் வரும் செப்டம்பர் 14 ஆம் தேதிமுதல் ஒளிபரப்பாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிக்பாஸ் செட் மும்பை பிலிம் சிட்டியில் அமைக்கப்படவுள்ளது. கொரோனா சூழலில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்படுவதால் நான்கு மாதமாக வீட்டில் முடங்கியுள்ள் மக்களுக்கு செம்ம எண்டர்டெயின்மெண்ட்டுதான் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு எபிசோட்டிற்கு மட்டுமே சல்மான்கான் சம்பளம் 16 கோடி ரூபாய் என்று தகவல் பரவி வருவது குறிப்பிடத்தகது. இந்நிலையில் தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் ஆர்வத்தில் இருக்கிறார்கள்.