சினிமா

கதாநாயகியானார் ‘பிக்பாஸ்’ ஜூலி.!

கதாநாயகியானார் ‘பிக்பாஸ்’ ஜூலி.!

webteam

முதன்முறையாக ‘பிக்பாஸ்’ ஜூலி கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

முகம் தெரியாதவராக இருந்த ஜூலி, மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் தமிழக முழுவதும் அறிந்தவரானார். அதன் பின் அவரது போராட்டம் முழக்கம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதில் கிடைத்த அறிமுகத்தின் மூலம் கமல்ஹாசனின் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு இவர் அழைக்கப்பட்டார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி தொடங்கியது முதலே ஜூலி பார்வையாளர்களால் வில்லியாக பார்க்கப்பட்டார். அவருக்கு அந்நிகழ்ச்சி மூலம் நெகட்டிவ் இமேஜ் அதிகம் கிடைத்தது. அதன் பிறகு அவர் தமிழகம் அறிந்த பெண்ணாக ஆனார். ஜூலிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே கனவாக இருந்தது. அதை அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியும் இருந்தார்.

இந்நிலையில் ‘பிக்பாஸ்’ வெளிச்சத்தின் மூலம் பலரும் பல விதங்களில் செல்வாக்கு மிக்கவர்களாக வலம் வர தொடங்கினர். இப்போது ஜூலி முதன்முறையாக ஒரு படத்தின் கதாநாயகியாக அறிமுகமாகிறார். தற்போது ஜூலி ‘கே7 புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இது குறித்து ஜூலி, “இந்தப் படத்தின் கதையை கேட்டதும் எனக்கு பிடித்து விட்டது. மேலும் இந்த வாய்ப்பு என் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார். இப்படத்திற்காக தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.