சினிமா

சொன்னதை கேட்கலைன்னா... அமிதாப் எச்சரிக்கை!

சொன்னதை கேட்கலைன்னா... அமிதாப் எச்சரிக்கை!

webteam

இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு அக்டோபர் 11-ம் தேதி 75-வது வயது பிறக்கிறது.
அவரது இந்த பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கு அமிதாப் பச்சன் அனுமதி கொடுக்கவில்லை. இந் நிலையில் ரசிகர்களுக்கு அவர் திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

’என் 75-வது பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாட ரசிகர்கள் பலர் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால், இதுபோன்ற பிரமாண்டங்களை நான் ஏற்கவும் அனுமதிக்கவும் மாட்டேன். என் விருப்பங்களுக்கு நீங்கள் மதிப்பு அளிக்கவில்லை என்றால் யாருமே இல்லாத, யாருக்குமே தெரியாத இடத்துக்கு நான் செல்ல நேரிடும்’ என்று தன் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார் அமிதாப்.