சினிமா

‘ஒரு விதை போதும் என்னால் ஒரு புது உலத்தையே உருவாக்க முடியும்’ - மிரட்டும் பூமி ட்ரெய்லர்!

sharpana

பொங்கலுக்கு ஓடிடியில் வெளியாகவிருக்கும் ‘ஜெயம்’ ரவியின் ’பூமி’ படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி இருக்கிறது.

ரோமியோ ஜூலியட், போகன் படங்களைத் தொடர்ந்து லக்‌ஷ்மண் –ஜெயம் ரவி கூட்டணி மூன்றாவதாக இணைந்துள்ள படம் பூமி. இப்படத்தில் ஜெயம் ரவி நாசா விஞ்ஞானியாகவும், விவசாயியாகவும் நடித்துள்ளார். ஜெயம் ரவியின் 25 வது படமாக வெளியாகவிருப்பதால் எதிர்பார்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் இப்படம் பொங்கலுக்கு ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாவதையொட்டி இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே, ‘டிக் டிக் டிக்’ படத்தில் விஞ்ஞானியாக நடித்துள்ள ஜெயம்ரவி இப்படத்தின் ட்ரைலரிலும் விண்வெளி உடையில் காணப்படுகிறார். அதேசமயம் விவசாய பிரச்சனைகளுக்காக கார்ப்பரேட்களிடமும் மோதுகிறார்.

பூமிநாதன் என்ற விஞ்ஞானியாக ’ஒரு விதை போதும் என்னால ஒரு புது உலத்தை உருவாக்க முடியும்’  ’ஏழு லட்சம் கிலோமீட்டர் உயரத்தில் இருந்து இந்த உலகத்தைப் பார்த்தவன் நான், நமக்கு இந்த உயரத்தைப் பார்த்தெல்லாம் பயம் இல்ல’ என்ற வசனங்களைப் பேசி ஒருபுறம் ஈர்ப்பவர், பாரம்பரிய விதை திருவிழா போர்டு பின்னணியில் வில்லன்களுடன் மோதுவது, விவசாயிகளுடன் சாலையில் அமர்ந்து போடுவது என விவசாயியாக புயலையும் கிளப்புகிறார்.

ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க, இமான் இசையமைத்துள்ளார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரைலரை வெளியிட்டுள்ளது.