நடிகை பாவனா தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில், சித்திரம் பேசுதடி, தீபாவளி, வெயில், ஜெயம் கொண்டான், அசல் உட்பட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பாவனா. தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துவருகிறார். கன்னடப் படத்தில் நடித்தபோது, தயாரிப்பாளர் நவீன் என்பவரை காதலித்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.
கடந்த மார்ச் மாதம் இவர்களுக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அக்டோபரில் திருமணம் நடக்கும் என்று கூறப்பட்டது. பின்னர் அது தள்ளி வைக்கப்பட்டது. இப்போது ஜனவரி மாதம் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகை பாவனா, தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.