சினிமா

பாவனா விவகாரம்: மெமரி கார்டை தேடி காவ்யா மாதவன் நிறுவனத்தில் சோதனை!

பாவனா விவகாரம்: மெமரி கார்டை தேடி காவ்யா மாதவன் நிறுவனத்தில் சோதனை!

webteam

நடிகை பாவனா கடத்தப்பட்ட சம்பவத்தில் நடிகை காவ்யா மாதவனின் நிறுவனத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு முடிந்து காரில் திரும்பிக் கொண்டிருந்த நடிகை பாவனாவை, ஒரு கும்பல் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியது. அதை செல்போனில் படம்பிடித்தது. இதுதொடர்பாக பல்சர் சுனி, மார்ட்டின், விஜிஷ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சில நாட்களுக்கு முன்பு நடிகர் திலீபிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 
திலீப்பும் நடிகை மஞ்சு வாரியரும் கடந்த 2014-ல் விவாகரத்து செய்தனர். இதற்கு பாவனாதான் காரணம் என நடிகர் திலீப் நினைக்கிறாராம். இந்நிலையில் நடிகை காவ்யா மாதவனை திலீப், திருமணம் செய்தார். பாவனாவை பழிவாங்க, நடிகர் திலீபின் ஏற்பாட்டிலேயே அவர் கடத்தப்பட்டார் என்று கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டை திலீப் மறுத்துள்ளார்.

இந்நிலையில் பாவனாவை கடத்திய போது பல்சர் சுனியும் கூட்டாளிகளும் அவரை செல்போனில் எடுத்த படங்கள் அடங்கிய மெமரி கார்டு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக பல்சர் சுனி போலீஸில் அளித்த வாக்குமூலத்தில், நடிகை காவ்யா மாதவனின் ஆடை நிறுவன அலுவலகத்தில் மெமரி கார்டை அளித்ததாகக் கூறியுள்ளார். இதையடுத்து அந்த நிறுவனத்தில் போலீசார் சோதனை நடத்தினர். அங்குள்ள கம்ப்யூட்டர், சிசிடிவி கேமரா பதிவுகளும் ஆராயப்பட்டுள்ளன.