சினிமா

கலர் மாறிய கன்னட ’ஜானு’!

கலர் மாறிய கன்னட ’ஜானு’!

webteam

தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான படம், ’96’. கடந்த வருடம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆன இந்தப் படத் தை சி. பிரேம்குமார் இயக்கியிருந்தார். தமிழில் ஹிட்டான இந்தப் படம், இப்போது கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. அங்கு இதற்கு ’99’ என்று டைட்டில் வைத்துள்ளனர். 

இதில், திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் இருந்த பாவனா, ஜானுவாக நடிக்கிறார். கணேஷ் ராம் ஆக நடிக்கிறார். பிரீத்தம் கப்பி இயக்கும் இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் 17 ஆம் தேதி தொடங்கியது. கன்னடத்துக்காக, கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதில் நடிப்பது பற்றி பாவனா கூறும்போது, ‘’எல்லோர் வாழ்க்கையையும் ஜானு-ராம் கேரக்டர் கண்டிப்பாக தொட்டுச் சென்றி ருக்கும். பார்க்கிற யாவரும் தங்களை கதைக்குள் பொருத்திக்கொள்வதால் இந்தப் படம் ஹிட்டாகி இருக்கிறது. இதனால் இது அனைத்து மொழிக்குமான கதை இது. அழகாக சொன்ன விதத்தில் இந்தப் படம் எனக்குப் பிடித்திருந்தது. நான் இப்போது ஜானுவாகி இருக்கிறேன்.

எனது லுக்-கை ஒரிஜினல் படத்தில் இருந்து மாற்றியிருக்கிறோம். ஜானு, மஞ்சள் வண்ண டிரெஸ் அணிந்திருப்பார். நான் கருப்பு மற்றும் பிரவுன் கலர் டிரெஸ் அணிந்து நடிக்கிறேன். எனது ஹேர்ஸ்டைலையும் மாற்றியுள்ளேன். ரசிகர்கள் இதை ஏற்பார்கள் என நம்புகிறேன்’’ என்கிறார் பாவனா.