சினிமா

“கடிதம் எழுதியதற்கு தேசத்துரோக வழக்கா ?” - பாரதிராஜா வருத்தம்

“கடிதம் எழுதியதற்கு தேசத்துரோக வழக்கா ?” - பாரதிராஜா வருத்தம்

webteam

மணிரத்னம்‌, ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீது‌ தேசவிரோத வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு இயக்குநர் பாரதிராஜா வருத்தம் தெரிவித்துள்ளார். 

அரசை விமர்சிப்பதால் ஒருவரை தேசவிரோதி, நகர்ப்புற நக்சல் என முத்திரை குத்துவதை ஏற்க முடியாது என்றும் கடிதம் எழுதியதற்காக தேசவிரோத வழக்குப்பதிவு செய்‌வதை ஏற்க முடியாது என்றும் பாரதிரா‌ஜா ஆதங்கப்பட்டுள்ளார். கலைஞர்கள் தங்கள் கருத்துகளை திரைப்படங்கள் மூலமாகவே பதிவு செய்ய வேண்டும், பொது வெளியில் பேசக்கூடாது என்று அச்சுறுத்துவது சரியல்ல எனத் தெரிவித்துள்ளார். 

அத்துடன்,‌ மாற்று கருத்துடையவர்களை பொய் வழக்குகள் மூலம் மவுனமாக்க முயல்வது ஏற்கத்தக்கது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், 49 பேர் மீதான தேசத்துரோக வ‌ழக்கை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.