பாலியல் குற்றங்களை தண்டிக்காவிட்டால், உலக நாடுகளில் இந்தியா தூக்கிலிடப்படும் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து இயக்குநர் பாரதிராஜா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “குழந்தையும் தெய்வமும் ஒன்று என்றால், எட்டு வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுவிட்டு, தெய்வத்தை எங்கே போய் தேடுகிறீர்கள். சுதந்திர இந்தியாவில் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் சுயநலமற்று செயல்பட வேண்டும். வாழும் பூமியை பாரத மாதா என்றும், ஓடும் நதிகளுக்குப் பெண்பால் பெயர் சூட்டியும் வழிபடும் நாம், பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் கவனமற்றுக் கிடக்கிறோம். குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி மடியும், இழிநிலை இனியும் தொடர வேண்டாம்” என்று வலியுறுத்தியுள்ளார்.