நிவின் பாலி, மமிதா பைஜு நடிப்பில் கிரிஷ் ஏ.டி இயக்கிய மலையாளப் படம் ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’. ஆகஸ்ட் 21-ஆம் தேதி ஓணம் வெளியீடாக திரைக்கு வந்த இந்தப் படத்திற்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக, படத்தின் நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வுகள் மற்றும் நிவின் பாலி–மமிதா பைஜு கூட்டணி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதன் காரணமாக படம் வாரங்கள் கடந்தும் திரையரங்குகளில் நல்ல வசூலைத் தொடர்ந்து வருகிறது. ரசிகர்களிடம் மட்டுமல்ல, பாக்ஸ் ஆபீஸிலும் படத்துக்குப் பெரிய வரவேற்பு. ‘Bethlehem Kudumba Unit’ கேரளாவில் மட்டும் ரூ.130 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, இந்த ஆண்டின் மற்றொரு மிகப்பெரிய வெற்றிப் படமான ‘Vaazha 2’ படத்தின் கேரள வசூலான 129.6 கோடியை முறியடித்துள்ளது. இதன்மூலம் கேரளாவில் அதிக வசூல் செய்த மலையாளப் படமாகவும் இது உருவெடுத்துள்ளது. Industry Hit என்ற அந்தஸ்தை அடைந்துள்ளது.
உலக அளவில் அதிக வசூல் செய்துள்ள மலையாளப் படமாக இருந்தது கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் வெளியான `லோகா'. இப்படத்தின் உலகளாவிய வசூல் 303.86 கோடி. இதனை 24 நாட்களில் முந்தி ரூ.305 கோடி உலகளவில் வசூளித்துள்ளது, ‘Bethlehem Kudumba Unit’. இதன்மூலம் உலகளவில் அதிக வசூல் செய்த மலையாளப்படம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது இந்தப் படம். ’சர்வம் மாயா’ படத்தில் ஹிட் கொடுத்த நிவின், அதன் பிறகு ’Baby Girl’, ’Prathichaya’ படங்களில் பின்னடைவை சந்தித்தார். இப்போது அவருக்கும் ஒரு கம்பேக் படமாக அமைந்துள்ளது ‘Bethlehem Kudumba Unit’.