சினிமா

நடிகை தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் திரை உலகம்!

நடிகை தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் திரை உலகம்!

webteam

பெங்காலி நடிகை பயல் சக்ராபோர்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக நடிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்காலி நடிகை பயல் சக்ராபோர்தி. 38 வயதான இவர் ஏராளமான தொலைக்காட்சி சீரியல்கள், வெப் சீரிஸ், திரைப்படங்கள் என பலவற்றில் நடித்துள்ளார். இந்நிலையில் சிலிகுரியில் உள்ள ஹோட்டல் அறையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை தான் செய்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இருப்பினும் இதுதொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

செவ்வாய்கிழமை ஹோட்டலுக்கு சென்ற பயல் சக்ராபோர்தி நேற்று கேங்டாக் செல்ல திட்டமிட்டிருக்கிறார். அந்தத் தகவலை அங்குள்ள ஹோட்டல் ஊழியர்களிடமும் தெரிவித்திருந்தார். ஆனால் சொன்னபடி நேற்று அவர் ஹோட்டல் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனையடுத்து சக்ராபோர்தியின் அறையை ஹோட்டல் ஊழியர்கள் நெடுநேரமாக தட்டியுள்ளனர். 

ஆனால் எந்தவித எதிர்வினையும் இல்லை. இதனையடுத்து அறையை உடைத்து சோதனையிட்டபோது அங்கு தூக்கிட்டு தொங்கிய நிலையில் பயல் சக்ராபோர்தி மீட்கப்பட்டுள்ளார். சமீபத்தில் கணவரை பிரிந்த அவர் தனது குழந்தையுடன் வசித்து வந்த நிலையில் தற்போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பயல் சக்ராபோர்தியின் மரணம் சக நடிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.