சினிமா

அழகு ரகசியங்களை பகிரும் டாப்ஸி..!

அழகு ரகசியங்களை பகிரும் டாப்ஸி..!

Sinekadhara

பாலிவுட் நடிகைகளில் தைரியமாகப் பேசக்கூடிய, கருத்துகளை வெளிப்படுத்தக்கூடிய நடிகைகளில் டாப்ஸியும் ஒருவர். பெரும்பாலும் இயற்கை அழகை விரும்பக்கூடிய டாப்ஸியின் அழகு ரகசியங்கள் குறித்து அவரே தெரிவித்துள்ளார்.

டாப்ஸியை திரைப்படங்களிலும், நிகழ்ச்சிகளிலும் பெரும்பாலும் மேக் அப் இல்லாமல் பார்க்கமுடியும். அதுமட்டுமல்லாமல் இயற்கையான பொருட்களை வைத்தே அழகை பராமரிக்க விரும்புவாராம். அதனால் ஆர்கானிக் பொருட்களை மட்டுமே, தான் பயன்படுத்துவதாக பேட்டிகளில் கூறியிருக்கிறார். மேலும் ஃபேஸ்பேக்கிற்கு தக்காளி மற்றும் கற்றாழையை பயன்படுத்துவதாகக் கூறியிருக்கிறார்.

மற்ற நடிகைகளைப் போலவே சருமத்தைப் பராமரிக்க அடிப்படையான சிடிஎம் என்று சொல்லப்படுகிற க்ளென்சிங், டோனிங் மற்றும் மாய்ஸரைசிங் ஆகியவற்றை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

மேக்அப் இல்லாத தன்னுடைய இயற்கை அழகை விரும்பும் டாப்ஸி, மேக் அப் போடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு மேக் அப் முழுவதையும் சுத்தமாக கலைத்துவிட்டுத்தான் செல்லுவாராம்.

மேலும் தன்னுடைய இயற்கை அழகின் முக்கிய ரகசியம் தினமும் 8 மணிநேரம் தூங்குவதுதான் என்கிறார் அவர். தினமும் 8 மணி நேரம் தூங்கினால் இயற்கையாகவே பளபளப்பான சருமத்தைப் பெறலாம் என்கிறார் டாப்ஸி.