சினிமா

ஆகஸ்ட் 1 முதல் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

PT WEB

விஜய் நடித்து வரும் `பீஸ்ட்’ திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு வரும் ஒன்றாம் தேதி முதல் தொடங்குகிறது.

நெல்சன் திலீப் குமார் இயக்கும் இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஊரடங்கிற்கு பிறகு கடந்த மாதம் சென்னையில் உள்ள கோகுலம் படப்பிடிப்பு தளத்தில் பீஸ்ட் படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது. அதில் சண்டை காட்சி உட்பட படத்திற்கான முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்த நிலையில் சில நாட்களாக ஓய்வில் இருக்கும் நடிகர் விஜய், வரும் ஒன்றாம் தேதி முதல் பீஸ்ட் 3ஆம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். இதற்காக படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். இந்த மூன்றாம் கட்ட படப்பிடிப்பும் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுகிறது.