rajinikanth, balakrishna pt web
சினிமா

‘ஜெயிலர் 2’ ரஜினியுடன் கைகோர்க்கும் பாலகிருஷ்ணா.. சம்பளம் மட்டும் ரூ.50 கோடியாம்!!

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடிப்பதற்கு தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

PT WEB

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்த ‘ஜெயிலர்’ படம் 2023இல் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்றது. அந்தப் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட முன்னணி தென்னிந்திய நட்சத்திரங்கள் கெளரவத் தோற்றத்தில் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகமான ’ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுவருகிறது.

இதில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இப்போது அந்தத் தகவல் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. 20 நாள் கால்ஷீட்டுக்கு பாலகிருஷ்ணா 50 கோடி ரூபாய் சம்பளம் கேட்டிருப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் எந்தத் தயக்கமுமின்றி அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலகிருஷ்ணாவிற்கு மிக முக்கியமான கதாப்பாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆந்திராவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரியாக அவர் நடிக்க உள்ளதாகவும் தெலுங்கு சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. சிறப்புத் தோற்றத்திலோ அல்லது சிறிய கேமியோ கதாப்பாத்திரத்திலோ நடிப்பதைத் தாண்டி மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்க பாலகிருஷ்ணா விருப்பம் தெரிவித்ததாகவும் அத்தகைய சூழலை இயக்குநர் நெல்சன் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஜெயிலர் 2ஆம் பாகத்திலும் சிவ ராஜ்குமார் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் மோகன்லால் மீண்டும் திரைப்படத்தில் வருவாரா என்னும் தகவல் இன்னும் உறுதியாகவில்லை.