சினிமா

ஐஸ்வர்யாராய்க்கு ஜோடியா? பொன்னியின் செல்வனில் இணையும் இயக்குநர் பாலாஜி சக்திவேல்..!

webteam

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தை திரைப்படமாக உருவாக்குகிறார் இயக்குநர் மணிரத்னம். ஊரடங்கு முடிந்ததும் அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில் தயாராக இருக்கிறது படக்குழு.

பொன்னியின் செல்வன் வரலாற்றுக் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகர்கள் யார் என்பதே தொடர் செய்தியாக இருந்துவருகிறது. சின்ன பழுவேட்டரையராக நிழல்கள் ரவி நடிக்கிறார். அந்தப் பட்டியலில் லேட்டஸ்ட் வரவு இயக்குநர் பாலாஜி சக்திவேல். ஏற்கெனவே வெற்றிமாறனின் அசுரன். வானம் கொட்டட்டும் உள்பட பல படங்களில் அவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

பெரிய பழுவேட்டயராகத்தான் பாலாஜி சக்திவேல் நடிக்கிறார். அந்த கதாபாத்திரத்தில் பிரபுவும் சின்ன பழுவேட்டரையராக சரத்குமாரும் நடிப்பதாகப் பேசப்பட்ட நிலையில், அந்த வேடங்களை இவரும் நிழல்கள் ரவியும் பகிர்ந்துகொண்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் வேறு வேடங்கள் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் கதையின்படி பெரிய பழுவேட்டரையரின் மனைவி நந்தினி. அந்த கதாபாத்திரத்திலும் ராணி மந்தானிகினி தேவியாகவும் இருவேடங்களில் ஐஸ்வர்யாராய் பச்சன் நடிப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படிப் பார்த்தால், பாலாஜி சக்திவேலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்கிறாரா? என்பது படப்பிடிப்பு தொடங்கினால் தெரியவரும்.