‘பாகுபலி’ கதாபாத்திரங்களின் ஸ்டிக்கர்களை ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும், பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பாகுபலி 2’ வசூலில் ரூ.1500 கோடியைத் தாண்டியுள்ளது. இயக்குநர் ராஜமெளலி இயக்கி பிரபாஸ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த இந்த பிரம்மாண்ட திரைப்படம் சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டது.
இந்நிலையில், கமெண்ட்களில் ஸ்டிக்கர் மூலமாக கருத்துகளை வெளிப்படுத்தும் வகையில், பாகுபலி’ படத்தின் கதாபாத்திரங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை வெளியிட்டுள்ளது ஃபேஸ்புக்.
இந்திய திரையுலகில் முதன் முறையாக ஃபேஸ்புக் ஸ்டிக்கர் வெளியாகும் படமாக ‘பாகுபலி’ அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.