’பாகுபலி -2’ தமிழ் திரைப்படம் சட்ட விரோதமாக இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பாகுபலி 2-ம் பாகம் திரைப்படம் தமிழ் மொழியில் வெளியாவதில் சிக்கல் நீடித்தது. இந்நிலையில் இணையத்தில் படம் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் 650 திரையரங்குகளில் பாகுபலி 2-ம் பாகம் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் இடையேயான பிரச்னை காரணமாக தமிழில் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இன்று அதிகாலை வரை நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து, படம் காலை வெளியானது. இந்நிலையில் இணையத்தில் முழு படமும் நேற்றிரவே வெளியானதால் தயாரிப்பாளரும் படக்குழுவினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.