சினிமா

‌''அடுத்தவர்களின் கதைகளை திருடி‌ படம் எடுத்தால் ஒத்துக்கொள்வதில்லை'' - பாக்யராஜ்

webteam

தமிழ் சினிமாவில் அடுத்தவர் கதைகளை திருடி படம் எடுக்கும் இ‌யக்குநர்களை இயக்குநர் பாக்யராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

எழுத்தாளர் அஜயன் பாலா எழுதிய 'சினிமா வ‌ரலாறு' என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய‌ பாக்யராஜ், கதையை திருடியவர்கள் திருட்டை ஒத்துக் கொள்வதே இல்லை என மறைமுகமாக சாடினார்.

மேலும், “தெரிந்தோ தெரியாமலோ இரண்டு கதைகளும் ஒத்துப்போகின்றன. அவர் உனக்கு முன்னால் பதிவு பண்ணியுள்ளார் என்று சொன்னால் அதுக்கு நான் எப்படி ஒத்துக்கொள்வேன் என்று சொல்கிறார்கள். அடுத்தவர் உடையை ஆல்டர் பண்ணி போட்டால் ஃபிட்டிங் சரியாக இருக்கும். ஆனால் துணி பழையதுதான். எனவே வருங்கால தலைமுறைகள் இதுபோன்ற செயலை செய்யாதீர்கள். படத்தை திருடி படம் எடுத்தால் உருப்பட முடியாது. நீண்ட காலம் நிலைக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

சர்கார், பிகில் மற்றும் அண்மையில் வெளியான ஹீரோ உள்ளிட்ட படங்களின் கதைகள் தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில் பாக்யராஜ் இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.